உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கிண்ணியா பிள்ளையார் கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
112 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கிண்ணியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் நிலப்பரப்பில், மறு அறிவித்தல் வரும் வரை எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்கக் கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்றம் தொல்பொருள் திணைக்களத்திற்கும் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கும் அதிரடி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிண்ணியா பிள்ளையார் கோவில் அமைந்திருந்த வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு எதிராகச் சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் அவசர நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேல் நீதிமன்றில் ஆஜராகி, அப்பகுதியின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி தொல்பொருள் திணைக்களத்தினதும் மாவட்டச் செயலகத்தினதும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக வலுவான சட்டவாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த திருகோணமலை மேல் நீதிமன்றம், தொல்பொருள் திணைக்களமும் மாவட்டச் செயலாளரும் குறித்த பகுதியில் மேற்கொண்டு வரும் அல்லது திட்டமிட்டுள்ள அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், நீதிமன்றத்தின் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் எவ்வித மாற்றங்களையோ கட்டுமானங்களையோ செய்யக் கூடாது எனவும் கட்டளையிட்டது.

கிண்ணியா பிள்ளையார் கோவில் பகுதி தமிழ் மக்களின் நீண்டகால ஆன்மீக மற்றும் பண்பாட்டு உரிமை சார்ந்த இடமாக விளங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் அரசியல் பிரதிநிதிகள் மத்தியிலும் பெருமளவு அதிருப்தி நிலவி வந்த நிலையில், இந்நீதிமன்ற உத்தரவு மக்களின் வரலாற்று உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான சட்டப் போராட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

38 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

29 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

25 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

25 0 0