உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கோலாகலமாக நடைபெற்ற Global Brand Awards 2026 மற்றும் SHE FOR THE NATION – Season 2 சர்வதேச விருது விழா.!

இலங்கை செய்திகள் 7 நாட்கள் முன்
71 பார்வைகள்

இலங்கையில் நடைபெற்ற Global Brand Awards 2026 மற்றும் SHE FOR THE NATION – Season 2 சர்வதேச விருது விழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகள் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கையை வந்தடைந்தனர்.

சர்வதேச பங்கேற்பாளர்கள், விருதாளர்கள், தொழிலதிபர்கள், தொழில்வல்லுநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பிரமாண்ட விழாவின் முதன்மை விருது வழங்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் (பிரதமர் உத்தியோகபூர்வ இல்லம்) கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவின் Anyelp Groups நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், வணிகர்கள், தொழில்வல்லுநர்கள், பெண் தலைவர்கள் மற்றும் பல சர்வதேச முத்திரை (Brand) நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன சிறப்பு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், KGF திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இந்திய திரைக்கலைஞர் கருடா ராம் சர்வதேச சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இவ்விழாவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு “மிகவும் மகிழ்ச்சி நிறைந்த காலகட்டத்தின் ஜனாதிபதி” (President of the Happiest Era) என்ற கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Global Brand Awards 2026 மூலம் தத்தமது துறைகளில் சிறந்த சாதனைகள், தலைமைத்துவம், கண்டுபிடிப்புகள், அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்குப் பங்காற்றிய சிறந்த நபர்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச முத்திரைகள் கௌரவிக்கப்பட்டன.

அத்துடன், SHE FOR THE NATION – Season 2 நிகழ்வின் மூலம் இந்தியா, மலேசியா, மாலைத்தீவு, இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்மாதிரியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய அழகிப் போட்டிகளிலிருந்து வேறுபட்டு, SHE FOR THE NATION திட்டமானது ஒரு பெண்ணின் வெளிப்படை அழகைக் காட்டிலும், அவரது சுயநம்பிக்கை, தயவு, தலைமைத்துவம், பண்பாடுகள், சேவை மனப்பான்மை மற்றும் இலட்சியங்களை முன்னிலைப்படுத்துகிறது.

“ஒவ்வொரு பெண்ணின் உண்மையான ஆபரணம் அவளது புன்னகையே” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழும் பெண்களின் சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த சர்வதேச நிகழ்வானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களையும் நிறுவனங்களையும் ஒரே மேடையில் இணைத்து, சர்வதேச உறவுகள், வணிக தொடர்பு (Business Networking), கலாச்சார பரிமாற்றம் மற்றும் சிறப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

Global Brand Awards 2026 மற்றும் SHE FOR THE NATION – Season 2 ஆகிய இரு நிகழ்வுகளும் இலங்கையில் நடத்தப்பட்டதன் மூலம், சர்வதேச அளவிலான விருதாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரை இலங்கைக்கு ஈர்க்க முடிந்ததுடன், சர்வதேச நிகழ்வுகளை நடத்தும் இலங்கையின் ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

110 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0