உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

நாய் இறைச்சி விற்பனை என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்…

11 0 0
இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

42 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

32 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

29 0 0