உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

203 ஆண்டுகளாக முகவரியின்றி வாழும் மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக் கொடுக்க புதிய முயற்சி.!

இலங்கை செய்திகள் 7 நாட்கள் முன்
75 பார்வைகள்

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மலையகப் பகுதிகளில் சுமார் 203 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்கள், இன்றளவும் நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் அரச சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரிடோ (PREDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் உள்ள பல்வேறு தோட்டங்களில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக கிளாஸ்கோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மக்களுக்கு நிரந்தர முகவரியின் அவசியம் மற்றும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் நேற்று 30 ஆம் திகதி நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியை குமுதினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் தபால் நிலைய உத்தியோகத்தர் திரு. சீலன் ஆகியோர் கலந்துகொண்டு, நிரந்தர முகவரி பெறுவதன் முக்கியத்துவம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டினர்.

இதன்போது, தோட்ட மக்களின் நிரந்தர முகவரி தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மக்கள் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

நீண்ட காலமாக முகவரியற்ற நிலையில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு அடையாளத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மிக விரைவில் தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்பட்டு, அவை பிரதேச செயலகத்திற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

203 ஆண்டுகால வாழ்வுக்கு பின்னரும் முகவரியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

97 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0