உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமரால் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
137 பார்வைகள்

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.

இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (68), வவுனியாப் பல்கலைக்கழகம் (07) மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் (01) ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தமாக 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஆடம்பரமான கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு மிகவும் எளிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 7 மாணவர்கள் மற்றும் செயற்கை அவயவங்களைப் பயன்படுத்தும் ஏனைய மாணவர்களும் பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கி வைத்து, உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் வெற்றிகொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ள நீங்கள் அனைவரும் விசேடமானவர்கள். உங்களின் துணிச்சலுக்கும் சளைக்காத ஆற்றலுக்கும் வலுவூட்டும் வகையிலேயே ஜனாதிபதி நிதியத்தினூடாக இந்த உதவிக் கரங்களை நீட்டியுள்ளோம். நீங்கள் ஏனைய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது யுத்தத்தினால் ஏற்பட்ட கவலைக்குரிய விடயமாகும். மீண்டும் ஒருமுறை இவ்வாறானதொரு யுத்தம் ஏற்படாத வகையில், அதற்கான காரணிகளை இல்லாதொழிக்கும் பொறுப்புள்ள அரசாங்கமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்து வருகின்றோம்.

மக்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருந்த ஜனாதிபதி நிதியத்தை, மக்களுக்கான நெருக்கமான நிலைக்குக் கொண்டுவந்து தேவையானவர்களுக்கு உதவி செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் முன்னெடுத்துள்ளார். இது சலுகைகளை அனுபவிப்பவர்களுக்கானது என்ற வரலாற்றை மாற்றி, உண்மையான தேவை உள்ளவர்களுக்காக இந்த நிதியம் இன்று செயற்பாட்டு ரீதியில் இயங்குகிறது.

கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, முன்பள்ளி முதல் மேற்படிப்பு வரை ஜனாதிபதி நிதியத்தினூடாகப் பெரும் உதவிகளைச் செய்து வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்குச் சமத்துவமான நிலை கிடைப்பதும், அது சமூகத்தின் கருத்தாக நிலைநிறுத்தப்படுவதும் மிக முக்கியமாகும். உங்களை இந்நிலைக்கு உயர்த்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

100 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

108 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

101 0 0
இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

105 0 0