உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
148 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900ஹெக்டெயரில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15இலட்சத்து 43ஆயிரத்து 500 கிலோ உரம் தேவையினை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அவர்களை வலுப்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள், விவசாயக் காப்புறுதி, குளங்களை அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி செய்தல், மற்றும் வாய்க்கால் புனர்நிர்மாணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகவும், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விதை நெல் வழங்கள், பயிர்ச்செய்கைக்கான உரம் வழங்குதல், யானை மனித மோதல்கள், நஷ்டஈடு வழங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல குளங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், எதிர்வரும் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக எல்நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழல் மாற்றங்கள்,நீரைப்பெற்றுக்கொள்வதற்கான நிலைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

நீர்பாசன திணைக்களம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் அவ்றறினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் எதிர்காலத்தில் நீர்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

குறிப்பாக முந்தனையாறு திட்டத்தினை முன்கொண்டுசெல்வதற்கு உள்ள தடைகள் குறித்தும் அதனை திட்டமிட்டு செய்வதற்கான நீர்பாசன திணைக்களத்தின் மந்தகதிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விவசாயிகளினால் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல் விதைப்பு காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் விதைப்பு காலத்தில் தடையின்று உரத்தினைப் பெற்றுகொள்ளுதல் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்படதுடன் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

100 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

108 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

101 0 0
இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

105 0 0