உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
61 பார்வைகள்

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை எனவும், உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் மீனவ மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழிலவாய்ப்புகள் நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடி நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களின் பயன்பாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை இந்த மீன்வளம் நசிந்துபோவதற்குப் பிரதான காரணமாக மாறியுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0