உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தொடருந்து மோதி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
150 பார்வைகள்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று(17) காலை தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியந்தன் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தாண்டிக்குளம் புகையிரத பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது பாதைக்கு அருகில் நின்றபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக் கைப்பற்றினர்.

விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

82 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

87 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0