உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கு தெங்கு முக்கோணத் திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
112 பார்வைகள்

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது.

2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது.

இதன்போது தெங்கு காணிகளுக்கான நீர் விநியோக அமைப்புகளை அமைப்பதற்காக 443 தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன.

மேலும், விசேட தெங்கு காணி மறுசீரமைப்பு மானியத் திட்டத்தின் கீழ் மேலும் 72 பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, வட மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3,000 தென்னம்பிள்ளைகள் பயிர்ச்செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

“வடக்கு தெங்கு முக்கோணம்” தேசிய திட்டம் பருத்தித்துறை, சிலாபத்துறை மற்றும் கொக்கிலாய் பகுதிகளை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்: வட மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், பயன்படுத்தப்படாத காணிகளை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், தெங்கு பயிர்ச்செய்கையாளர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல் மற்றும் தேசிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு தெங்கு தொழில்துறையின் பங்களிப்பை அதிகரிப்பதாகும்.

‘கற்பகத்தரு வளம்’ மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “வடக்கு தெங்கு முக்கோணம்” மூலம் இலங்கையின் வட மாகாணத்தை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றுதல், தெங்கு பயிர்ச்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், தெங்கு சார்ந்த தொழில்களுக்கான தொடர்ச்சியான மூலப்பொருள் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் தேசிய ஏற்றுமதி வருவாயை உயர்த்துதல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

45 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

53 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

45 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

55 0 0