உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சம்மாந்துறையில் கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
75 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி   ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

49 0 0