உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காகக் கொண்டு யாழில் மாபெரும் திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
97 பார்வைகள்

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா’ (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும் சனிக்கிழமை (15.08.2026) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும் அமையவுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன்,
வட மாகாணத்தின் பாரம்பரியமும் பண்பாடும் சுற்றுலாத்துறையின் ஊடாக உலக அரங்கில் மேலும் உயர்த்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப் பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக் கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை, பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும், என்றார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0