உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் தபால்துறை தொடர்பில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
103 பார்வைகள்

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு – செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர். டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார்.

பொருட்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15 வீத பங்களிக்கும் அந்தச் சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0