உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் அராலியில் வீடு புகுந்து கொள்ளை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
121 பார்வைகள்

அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

குறித்த கும்பலானது முகங்களை மூடி காட்டியவாறு வந்ததால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0