உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

செம்மணி விவகாரம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
49 பார்வைகள்

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 05.08.2026 இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளம் காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள்.

மூன்றாவது கட்டமானவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைது செய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார்.

எனவே இது தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0