உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
54 பார்வைகள்

தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்ற வகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவுகூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த மே மாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜ்ஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவுகூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026 நேற்று முன்தினம் இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வில் எனக்கு மிகவும் கவர்ந்த விடயம் என்னவெனில், கேடயத்தைத் தாங்கியவாறு இடம்பெற்ற வாள்ச் சண்டையாகும்.

கடந்த 1803ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 223ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது மாவீரன் பண்டாரவன்னியன் தாக்குதல்களை மேற்கொண்டு ஆங்கிலேயப் படைகள் நிலைகொண்டிருந்த ஒல்லாந்தக் கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றினான்.

ஆங்கிலேயப் படைகள் பீரங்கிகளுடனும், துப்பாக்கிகளுடனும் மிகவும் பலமாக எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோதும், இவ்வாறான வாள்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும் பயன்படுத்தியே மாவீரன் பண்டாரவன்னியன் தனது தமிழர் படையுடன் இணைந்து ஆங்கிலேயரது கோட்டைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தினான். அன்னியப்படைகளை வென்று வாகை சூடினான் என்று வரலாறுகள் கூறுகின்றன.

எமது வன்னி மன்னன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட அந்த ஒல்லாந்தக் கோட்டையின் சிதைவுகள் தற்போதும் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் காணப்படுகின்றன.

மாவீரன் பண்டாரவன்னியனின் இந்த வீரதீரச் செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றோம்.

இதை ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால், வீர விளையாட்டுக்களில் யாரும் தமிழர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறாக எமது பூர்வீகப் பரம்பரைகள் எவ்வாறு வீரம் செறிந்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக வரலாறுகள் பல காணப்படுகின்றன.

அதன் பின்னரான விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த வரலாற்றினையும் அனைவரும் அறிவீர்கள். உலகநாடுகளே வியந்துபார்க்கும் அளவில் அவர்களின் வீரதீர செயற்பாடுகள் இருந்தன.

அத்தகைய பரம்பரை வழியில் வந்த எம்மவர்களிடமும் வீர எண்ணங்களே குடிகொண்டிருக்கும். அவர்களும் வீரம் செறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றில் கடந்த மே மாதம் எங்களுடைய மண்ணின் மைந்தன் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்தியிருந்தேன்.

அதற்கு எதிர்க்கட்சியைச் சேரந்த நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆளும்தரப்பினர் அதற்கு எவ்வித எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வீரஞ் செறிந்த வரலாறுகளையுடைய எம்மவர்களையும், அவர்களின் வீரதீர செயற்பாடுகளையும் நினைவுகூர வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். நினைவுகூரல் என்னும் எமது வரலாற்றுக் கடமையினை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

யாருடைய கூச்சலுக்காகவும் பயந்துகொண்டு, இத்தகைய நினைவுகூரல்களைச் செய்யாமல் அடங்கி ஒடுங்கி இருக்கமாட்டோம்.

அத்தோடு தற்போது இந்த வீரவிளையாட்டுக்கள் இடம்பெறும் இந்த முற்றவெளி மைதானத்தில்தான் அன்று விடுதலைப்புலிகளின் காலத்தில், கடற்புலிகளின் ஏற்பாட்டில் சனத்திரள்களின் மத்தியில் மிகவும் சிறப்பான முறையில் எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்வு இடம்பெற்றது. அதனையும் இந்த நேரத்தில் மீட்டிப் பார்க்கின்றேன். இவ்வாறாக முல்லைத்தீவு மண்ணிற்குப் பல பெருமைகள் உண்டு.

இப்படியாக எம்மவர்கள் தமிழர்களின் வீரக் கலைகளை கற்றுக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் காட்டும் போது மிகவும் மனமகிழ்வாக உள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

50 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0