உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை – மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
61 பார்வைகள்

மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை – பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட இந்த மண்சரிவுச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி – சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள், நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0