உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி  கைது!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
101 பார்வைகள்

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி  அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும். எனினும், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தை சந்தேகநபரான பெண் பொலிஸ் அதிகாரி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியான உதவி பொலிஸ் அதிகாரி (1) சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட  குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

1 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0