உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடியவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
172 பார்வைகள்

இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமையச் செயற்பட்ட அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0