உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வவுனியாவில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 லட்சம் அபராதம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
109 பார்வைகள்

இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ.400 ஐ விட அதிகமாக ரூ.550 வசூலித்திருந்தது கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு ரூ.500,000 அபராதம் விதித்தது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

59 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0