உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
102 பார்வைகள்

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி தரை வழியினூடாக கொண்டு செல்லப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதுடன், கைதானவர்கள் 24 முதல் 46 வயதிற்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

59 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0