உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அம்பாறை ரீகல் சந்தியில் கோர விபத்து!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
65 பார்வைகள்

அம்பாறை ரீகல் சந்திப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று  திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்  மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.

இதன்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அத்துடன், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

59 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0