உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” விழிப்புணர்வு நடைபவனி இன்று!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
152 பார்வைகள்

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் (28) நாடெங்கிலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் 27ஆம் திகதி முதல் “தேசியநேர்மை வாரம்” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் தூய்மையான அரச சேவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் “தேசிய நேர்மை நடைபவனி மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் முக்கிய வீதி வழியாக காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு  நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு நடைபவனியில் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தும் வகையிலான பதாகைகளை ஊர்வலத்தில்  கலந்து கொண்டவர்கள்  ஏந்திச்சென்றனர்
இதன்போது நிகழ்வின் இறுதியில் நேர்மை வாரத்தின் முக்கியத்துவம் பற்றி அரசு ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நாடகம் ஒன்று இங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திணைக்கள உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு பொலிஸ் ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,மாவட்டத்தின் சகல பிரதேச செயலக உயர் அதிகாரிகள, ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0