உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுகின்றமை நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் செயல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
126 பார்வைகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.” – இப்படி ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மூத்த சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது மிக மிக மோசமான விடயம்.

இந்த அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக கொடுத்திருந்த வாக்குறுதி ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் என்பதாகும். அதைக் கூறி, ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன.

இந்த இடைப்பட்ட காலத்தில் இதற்கான சம்பாசணை ஆரம்பிக்குமாக இருந்தால் அதிலே நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும், அது எப்போது அமுல்படுத்துவது என்பது தொடர்பாகவும் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கும். ஆனால் நடைபெறவில்லை.

அவசரமாக அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரவேண்டுமாக இருந்தால் கடந்த அரசில் அவர்கள் (ஜே.வி.பியினர்) கொண்டு வந்த தனி நபர் பிரேரணையாகத்தான் இருக்க வேண்டும். அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதுதான் ஒரு தனி நபர் பிரேரணையாக இருக்க வேண்டும். அதை விட வேறு விடயமாக இருக்க முடியாது. தாங்களே முன்னர் கொண்டு வந்த ஒரு திருத்தத்தை இன்னமும் அமுல்படுத்தாமல் எந்த வாக்குறுதியிலும், எந்த விஞ்ஞாபனத்திலும் இல்லாத ஒரு விடயத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.

அரசு இவ்வாறு செய்கின்றபோது ஏன் இவ்வளவு காலம் பொறுத்திருந்தார்கள் என்ற ஒரு கேள்வி எழுகின்றது. சில நீதியரசர்கள் இளைப்பாறுகின்றார்கள், சிலர் இளைப்பாற இருக்கின்றார்கள். சிலரை இளைப்பாற விட்டு, மற்றும் சில இளைப்பாற இருப்பவர்கள் இளைப்பாற முன்பு, குறித்த நேரத்தில் இதைக் கொண்டு வருவது ஏன் என்பதும் எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும்.

முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதுபோல மக்களுடைய வாழ்க்கை வயது கூடிவிட்டது ஆகையினால் நாம் இதனை நீடிக்கின்றோம் எனக் கூறுவது அனைவரையும் முட்டாளாக்கும் ஒரு செயற்பாடு. இப்படித்தான் வீழ்ச்சி அடைகின்ற அரசுகளின் முதல் சறுக்கல் தொடங்குவது. ஆகையினால் நாங்கள் இந்த அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் கொடுக்கின்றோம்.

அத்தோடு எதிர்க்கட்சியில் இருக்கின்ற யாராவது ஓர் உறுப்பினர் சென்ற நாடாளுமன்றத்திலே அவர்கள் (விஜித ஹேரத்) கொண்டு வந்த தனிநபர் பிரேரணையை இப்போது கொண்டு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கின்ற அதே சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.

அத்தோடு நீதி அமைச்சருக்கும் ஒரு கோரிக்கை. இந்தச் சட்டத் திருத்தம் திருத்தப்படுமாக இருந்தால் நீங்கள் பதவி விலக வேண்டும். ஏனென்றால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் நீங்கள் ஆயுள்கால உறுப்பினர். அச்சங்கம் இதனை ஒட்டுமொத்ததாக எதிர்க்கின்றது. அது மட்டுமல்ல, ஆரம்ப நிலை நீதிபதிகள், இடைநிலை நீதிபநிகள் மட்டுமல்ல, சட்டத்துறையில் இருக்கும் அனைவரும் எதிர்க்கும் வேளையில் சட்டத்தரணியான நீங்கள் இந்தச் சட்டமூலத்தை அமுல்படுத்தக் கூடாது. அது கொண்டு வரப்படுமானால் நீங்கள் பதவி விலக வேண்டும் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0