உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
63 பார்வைகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்து கொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் தொடக்க உரையாற்றினார்.

நேற்று திங்கட்கிழமை (27) இறுதி நாளில் 07, 08 மற்றும் 09 ஆகிய அமர்வுகளில் மொத்தம் 1,010 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 07 ஆவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 08 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளும், 09 ஆவது அமர்வில் 264 வெளிவாரிப் பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதற்கு முன்னர் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 01 முதல் 06 வரையிலான அமர்வுகளில் மொத்தம் 2,388 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றிருந்தனர்.

முதல் நாளான சனிக்கிழமை (25) நடைபெற்ற 01 ஆவது அமர்வில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 187 பட்டதாரிகளுக்கும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 285 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற 02 ஆவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 368 பட்டதாரிகளும், 03 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 414 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றனர்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற 04 ஆவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 418 பட்டதாரிகளுக்கும், 05 ஆவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 373 பட்டதாரிகளுக்கும், 06 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 343 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த 09 அமர்வுகளின் ஊடாக 3,134 உள்வாரிப் பட்டதாரிகளும், 264 வெளிவாரிப் பட்டதாரிகளுமாக மொத்தம் 3,398 பேர் பட்டங்களைச் சூடிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

76 0 0