உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்க இணக்கம்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
34 பார்வைகள்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது.

இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர். அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும், துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் கௌரவ ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி வழி உறுப்பினர்களும், துறைரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர் இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர். துறைரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.

மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட, ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.

இந்தச் சுமூகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில் அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

19 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

41 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

62 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

43 0 0