உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

ரயில் தண்டவாளத்தில் உறங்கியவருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
93 பார்வைகள்

மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் ரயிலில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (26) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து இரவு 7.40 மணியளவில் கொழும்பு நோக்கி ரயில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த குறித்த நபர் ரயிலில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்தவர் 65 வயதுடைய எம். ராஸிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும், 1990 ‘சுவசெரிய’ அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0