உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
72 பார்வைகள்

மொனராகலை மாவட்டம், வெல்லவாய – தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், கிரிந்தி ஓயாவுக்கு நேற்று நீராடச் சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி பிக்கு எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

உடனடியாகப் பிரதேச மக்கள் அவரை மீட்டுத் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 18 வயதுடைய பிக்குவே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் ஊவா குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

31 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

19 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

18 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

18 0 0