உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
88 பார்வைகள்

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இவ்வருடம் இதுவரை 81 ஆயிரத்து 511 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆயிரத்து 537 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இம்மாதத்தில் கடந்த 25 நாட்களில் மாத்திரம் 26 ஆயிரத்து 136 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாணங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் 43 ஆயிரத்து 132 (52.92 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 329 (15.13 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா (17,280), கொழும்பு (16,213), மாத்தறை (5,608), கண்டி (5,581), களுத்துறை (5,335), இரத்தினபுரி (4,551), காலி (4,499), குருநாகல் (2,265) உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் (3,315) தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் தென்படுமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும். மேலும், குழந்தைகளுக்கு 24 மணித்தியாளங்கள் காய்ச்சல் தென்படுமாயின் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரால் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், பொதுமக்கள் இந்த நாட்களில் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பளிக்காது தூய்மையாகப் பேணுவதோடு, நோய் பரவல் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

118 0 0