உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
119 பார்வைகள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.07.2026) சனிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் ‘விக்ரோறிய வித்தகம்’ எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர். 

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு நடனம், குழு இசை, ‘பதம்’ நடனம், சிங்களப் பாடல், ‘காலிங்க நர்த்தனம்’ நாட்டிய நாடகம் மற்றும் ‘துப்பல் பரிசு’ நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன. அத்துடன், மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0