உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
83 பார்வைகள்


சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா வை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

நேற்று தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிள் படு* கொலை பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ஆதங்கத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.

குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம் கூப்பி கேட்டோம் தமிழரசிகள் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர் தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.

அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.

தற்போது சிறையில் 10 தமிழரசிகள் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம் அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள் என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி இருக்கிறேன்.

அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு தெரியவில்லை என அவர் கவலையுடன் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0