உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

வலி. வடக்கில் இன்று ஆறாவது வரமாகவும் காணி மீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
134 பார்வைகள்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள்இ வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என பலாலி பொது நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதனால் ,  இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் இன்றி பல்வேறு இன்னல்களையும் அனுபவித்தனர்.

அத்துடன் இ தற்காலிக கொட்டகை அமைக்கவும் ,  தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட கூட பொலிஸார் அனுமதிக்காததால் ,  கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலின் கொடுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொண்டு முதியவர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

0 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

134 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

117 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

114 0 0