உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : பெண் உட்பட இருவர் கைது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
114 பார்வைகள்

அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன்  அங்கு முகாமையாளராக  பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து  உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட பொறி நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை இன்று அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் நேரடி வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, அம்பாறை பிரிவு 1 உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்கிரமரத்ன, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.டி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

97 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0