உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுப் பொய்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
80 பார்வைகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, தைரியமிருந்தால் இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறும் சவால் விடுத்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இத்தகைய கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும் ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார் என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல், இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான் சவால் விடுக்கின்றேன். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!

தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

22 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய…

21 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)…

46 0 0