உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நபரொருவர் கொ*லை; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
111 பார்வைகள்

புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் பணியாற்றி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்துள்ள அவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

90 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

120 0 0