உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
114 பார்வைகள்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று முற்பகல் 11.30 முதல் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து, குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

98 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

118 0 0