உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கறுப்பு ஜூலை 43ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
50 பார்வைகள்

1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த புதன்கிழமை (23) மாலை கல்முனை பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன்,

மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது
“1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும். 43 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் குறைந்தது 3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும், சொத்துக்களும் முற்றிலும் சூரையாடப்பட்டன.

அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக அழிக்கும் முனைப்புடன் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தர்மதாச (தொண்டமான்) தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன், ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்) உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0