பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய (24) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிள்ளையான் தொலைக் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.