உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பில்லியன் டொலர் மோசடி குறித்து விசேட விசாரணை நடத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
62 பார்வைகள்

சுங்கத் திணைக்களம், வங்கி மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுகிறார்கள். மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
”மோசடியான இறக்குமதி பரிவர்தனைகள் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் இருந்து 715 மில்லின் டொலர் வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முறையற்ற தந்தி பரிவர்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக தற்போது இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமையும் இவ்வாறான தன்மையில் காணப்படுகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. இந்த மூன்று பிரதான தரப்பிடம் முறையான தொடர்பாடல் இல்லாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுகிறார்கள்.

நிறுவன கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் செயற்படாத பின்னணியில் சட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. புதிய சட்டங்களை இயற்றும் போது வரி செலுத்தி சட்டத்தின் பிரகாரம் செயற்படும் இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.”- என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0