உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கன்னியாவில் புதிதாக எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை..!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
88 பார்வைகள்

திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ,  ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீதி ஒன்றின் பெயர்பலகையை திரைநீக்கும் நிகழ்வில் கலந்துகொண்டவரிடம் , கன்னியா பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கட்டட பணிகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி ஒரு தொல்லியல் தளமாகும். அது தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமானது என  வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.

அதன் பிரகாரம், அங்குள்ள தொல்பொருட்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

அங்கு புதிதாக எந்தக் கட்டுமானங்களையும் அமைப்பது எமது நோக்கம் அல்ல என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

10 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0