உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

பிலிப்பைன்ஸில் இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
69 பார்வைகள்

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் 33 ஆவது ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய – பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், இப்பயணத்தின் ஒரு பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

106 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0