உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசுக்கு எதிராக பாரிய அரசியல் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
78 பார்வைகள்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவது தொடர்பில் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அரசின் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுவது குறித்துக் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொலைபேசி வாயிலாகத் தனித்தனியாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

40 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

41 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0