உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

காணாமல்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
122 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினம் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று,மட்டக்களப்பு மேற்கு,ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இன்றைய தினம் சாட்சியங்கள் பெறப்பட்டு மறுமலர்ச்சி உதவி வழங்குவதாகவும் மரண பதிவும் வழங்குவதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டதாக முறைப்பாடுகளை வழங்கியோர் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம்,பட்டிப்பளை பிரதேச செயலகம்,வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற 295 முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 78முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 53விசாரணைசெய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0