உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி கவலை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
137 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரச்சினைகளை சரியான விதத்தில் தாங்கள் பேசுவார்கள் என்றும் ஆனால் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தங்களால் முடியுமா என்று கூற முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தங்களால் இயன்றவரை எங்களுக்காக வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.

தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டும், இங்கே நடந்தது இனப்படுகொலைதான் என்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சர்வதேசத்தின் ஊடான நீதி விசாரணை தான் எங்களுக்கு வேண்டும்.

உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ, OMP அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாங்கள் எத்தனை ஆணை குழுக்களை சந்தித்துள்ளோம், எத்தனையோ ஆட்சியாளர்களை சந்தித்துள்ளோம் இவை எல்லாவற்றையும் கடந்து தான் நாங்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோரியுள்ளோம்.

சர்வதேசம மீது உள்ள நம்பிக்கையில் தான் நாங்கள் இற்றைவரை சர்வதேசத்திடம் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.

எங்களுடன் இருந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் 450க்கும் மேற்பட்டோர் இற்றைவரை உயிரிழந்து விட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.

கொடூர யுத்தத்தின் பின்னர் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம்தான் விசாரணை செய்ய வேண்டும். கொலையாளிகள் ஒருபோதும் எமக்குத் தீர்வினை தர மாட்டார்கள். கொலையாளிகள் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0