உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
25 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில் உள்ள மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை நடைபெற்றது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய திருகோணமலையில் இடம்பெற்ற பூர்வாங்கக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் நேரடி அவதானிப்பின் கீழ் இந்த விழிப்புணர்வுத் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேடமுல்ல இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய வேளை அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வரும் திட்டமிட்ட நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ‘இந்த நிதி மோசடி வலைக்குள் அம்பாறை நகர மக்கள் மட்டுமல்லாது பல கிராமப்புற மக்களும் வீழ்ந்துள்ளனர். மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் படித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் கூட இவ்வாறான மோசடிக்காரர்களிடம் பெருந்தொகை பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர். இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி எமது கிராமத்து மக்களை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன் மற்றும் பிராந்திய முகாமையாளர் ரி.சஞ்ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் மற்றும் இணையவழி நிதி மோசடிகளிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து தெளிவுபடுத்தினர்.

இதன்போது மத்திய வங்கி அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, சவளக்கடை, சம்மாந்துறை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிராந்தியத்தின் கிராம அலுவலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் நிதி மோசடிகளின் தீவிரத்தன்மை குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகளால் ஆக்கபூர்வமான சொற்பொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் கலந்து கொண்டோருக்கு விளக்கமாக வழங்கி வைக்கப்பட்டன.

இதுதவிர அம்பாறை மாவட்டத்தில் பதிவாகும் நிதி மோசடிப் புகார்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடிக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பான விசாரணைகளும் இழந்த பணத்தை மீட்பதும் மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை என்பதால் பொதுமக்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதே இதற்கான ஒரே தீர்வு என இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் தத்தமது உரையில் சுட்டிக்காட்டினர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்.!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) இரவு…

39 0 0
அம்பாறை செய்திகள்

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன்…

92 0 0
அம்பாறை செய்திகள்

கிராம மக்களை இலக்கு வைத்து நிதி மோசடிகள்.!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிதி மோசடிகளிலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு அம்பாறை தலைமையக பொலிஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. அம்பாறை…

85 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.!

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது…

105 0 0