உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
27 பார்வைகள்

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் M.S.M. பைஷால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, பாடசாலையின் 2002ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (O/L) பழைய மாணவர் அணியினரின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த 10 மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான சிறப்பு நினைவச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் வெற்றிக்கும் தொடர்ச்சியாக வழிகாட்டி வரும் அதிபர் M.S.M. பைஷால் அவர்களின் சேவையைப் பாராட்டி, 2002 O/L பழைய மாணவர்கள் அணியினரால் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, சிறப்பு நினைவச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 2002 O/L பழைய மாணவர் அணியின் சார்பில் அதன் பிரதிநிதி S.N. ஹஸ்மி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

24 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

26 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

23 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று…

41 0 0