உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட பேருந்துகள் சோதனை.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
24 பார்வைகள்

நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே நானுஓயா, மார்காஸ்தோட்ட, பொரலாந்த போன்ற பகுதிகளில் இயங்கும் பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று பேருந்துகள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பகுப்பாய்விற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

டீசல் விலை அதிகம் காரணமாக டீசலுக்கு மாற்றாகவும் டீசலுடன் கலந்தும் பேருந்துகள் மற்றும் டிப்பர்களில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் அதிக நச்சுப் புகை மற்றும் அடர்ந்த கரும்புகை வெளியிடுகின்றன. இது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, காற்று மாசடைவது மற்றும் விரைவில் இயந்திரத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டு பழுதடைகிறது.

அத்துடன் எரிபொருள் உட்செலுத்திகள் பழுதுபடல், பிஸ்டன் தேய்மானம் என்பன வாகனத்தில் ஏற்படுகிறது எனவும் வாகன உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் தவிர்ந்த, வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவதோ அல்லது அவற்றை எரிகலவையாக்கி வாகனங்களை இயக்குவதோ முற்றிலும் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது உடனடியாகத் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதுடன், விபத்துக்கள் ஏதும் நேராத சந்தர்ப்பங்களிலும் கூட திடீரெனத் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யில் இயங்கும் பேருந்துகளை கண்டறியும் நோக்கில் தொடர்ந்தும் நுவரெலியாவில் அடிக்கடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமஷ்டியைத் தருவதாகக் கூறி ஜனாதிபதி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவில்லை!

சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன் அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும்…

42 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விண்ணப்பம்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது.…

17 0 0
இலங்கை செய்திகள்

துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். துருக்கித் தூதரகத்தில், தூதுவரின் உத்தியோகபூர்வ…

9 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

60 0 0