உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
74 பார்வைகள்

சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

8 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

9 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலுபோத்த பகுதியில் திங்கட்கிழமை…

10 0 0
இலங்கை செய்திகள்

உயிரை மாய்க்க முயன்ற கைதி.!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம்…

10 0 0