உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு இன்று ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
78 பார்வைகள்



அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு” இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகியது.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு, அதன் அரச நிர்வாகம் தொடர்பான செயற்திட்ட அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரச துறையில் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்து சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதே இந்தச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக, சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், தரவு முகாமைத்துவம், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய அரச கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இதில் பரந்த அளவில் கவனம் செலுத்தப்படும்.

மூன்று நாள் நிகழ்ச்சியில், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த மற்றும் முகவர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்படும். விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச் செயற்பாடுகள் மூலம் அரச அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

8 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

9 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலுபோத்த பகுதியில் திங்கட்கிழமை…

10 0 0
இலங்கை செய்திகள்

உயிரை மாய்க்க முயன்ற கைதி.!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம்…

10 0 0