உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணையை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

இலங்கை செய்திகள் 23 மணி நேரம் முன்
81 பார்வைகள்

பநீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீத்து அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

56 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

50 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

49 0 0