உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி.!

65 பார்வைகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு இன்று(20) நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்ற நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை பொலிஸ் துறையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

56 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

50 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

49 0 0